நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” [ நபிமொழி ]
ஜம் ஜம் கிணறு. பல ஆயிரம் வருஷமா, வற்றாத ஜீவ ஊற்றாக விளங்குவது இந்த ஜம் ஜம்.
முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதனைப் பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைகின்றார்கள்.
ஆகவே, புனிதமிக்க இந்த ஜம்ஜம் தண்ணீரில் அப்படி என்ன தான் சிறப்பு இருக்கிறது என்றால் அதில் அனைத்தும் இருக்கின்றது.
வறண்ட பாலைவனத்தில் உதித்த இந்நீரூற்று பல நூறு ஆண்டுகளாய் வற்றாமல், மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. என்றைக்குமே வற்றாத நீரூற்றாகத் தொடர்ந்து ஒலித்தோடிக் கொண்டிருக்கிறது.
இது ஐந்தடி ஆழமுள்ள கிணறு. இதற்கு அருகில் எந்த நீர் நிலைகளும், நீராதாரமும் மிக்க எந்த வழிகளும் கிடையாது. இந்தக் கிணற்றின் நீர் எப்போதும் தானாகவே பொங்கி வரக்கூடியதாகவும், கோடிக்கணக்கான ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவதோடு, தங்கள் தேவைகளுக்காகத் தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கும் நீர் சுரக்கின்றது.
இதில், கால்சியம், மெக்னீசியம் இருப்பதன் காரணமாக நோயைக் குணப்படுத்துகிறது.
இயற்கையாகவே, இதில் ஃபுளூரைடு கலந்திருப்பதால் நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய தன்மைகள் உண்டு என்று மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மிதவெப்பமான காலத்தில் நீர் நிலைகளில் ‘ஆல்கே’ என்ற பாசி படியும். ஆனால் இக் கிணற்றில் எவ்விதப் பாசியும் படிவதில்லை. மேலும் இது உயிர் – வேதியியல் காரணிகளின் கேடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
ஜம் ஜம்ன்னு ஏன் பெயர் வந்தது?
அது அரிய சரித்திரம். இந்த ஜம் ஜம் கிணத்துக்கும் பக்கத்திலே உள்ள ஸபா - மர்வா குன்றுகளுக்கும் தொடர்பு இருக்கு, ஜம் ஜம் நீரை அருந்திய பின் இந்த ஸவா - மர்வாவிலே நம் ஸயீ செய்யப் போறோம். அதுதான் தொங்கோட்டம்...
நபி இஸ்மாயில் பிறந்து வளர்ந்த இடம் இது. அவர்கள், அவர்களுக்காக ஆண்டவனின் அருட்கொடையா கிடைச்சது தான் இந்த ஜம் ஜம். இளங்குழந்தை இஸ்மாயிலையும், மனைவி ஹாஜிரா அம்மையாரையும் மக்காவில் இருக்கச் சொல்லிவிட்டு, இப்ராஹிம் நபி பாலஸ்தீனத்துக்குப் போயிட்டாங்க.
அன்னை ஹாஜரா (அலை) அவர்கள், தனது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பருகக் கொடுப்பதற்காக, இந்தப் பாலைப் பெருவெளியில் தண்ணீருக்காக ஸஃபா, மர்வா எனும் இரு மலைக் குன்றுகளுக்குக்கிடையில் ஓடிக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் தனது அருட்கொடையினால் இந்த நீரூற்றை ஓடச் செய்தான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“அல்லாஹ் தனது மிகப்பெரும் கருணையை இஸ்மாயீல் (அலை) அவர்களது அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் மீது பொழிவானாக ! அன்னை ஹாஜரா அவர்கள் அந்த ஜம்ஜம் தண்ணீரை (ஊற்றை) அது எவ்வாறு இருந்ததோ அதன்படி, (அதில் தொட்டி போன்று எதனையும் கட்டாமல்) அதிலிருந்து நீரூற்றாக ஒலித்தோடும்படி விட்டு வைத்தார்கள். ஜூர்ஹூம் என்ற அரபு கோத்திரதார் ஹாஜரா (அலை) அவர்களுடன் வந்து, நாங்கள் இங்கே உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, ஆம் ..! (தங்கிக் கொள்ளலாம்) ஆனால், இந்த நீரூற்றின் மீது உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. (என்றால் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்) என்றார்கள். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். (புகாரி)
இவ்வாறே உயிர் வாழ்வதற்கு எந்தவித ஆதாரமும் அற்ற அந்தப் பாலைப்பெருவெளியில் மனிதர்கள் குடியேறத் துவங்கினர்.
எடுக்க, எடுக்க இந்த நீர் வற்றுவதில்லை. ஆண்டவனின் அருட் கொடையாச்சே!
ஹஜ் பயணம் செய்பவர்கள் தாயகம் திரும்பும் போது 10 லிட்டர் ஜம் ஜம் நீரை எடுத்துச் செல்ல, சவுதி அரசாங்கம் அனுமதிக்கிறது. அதனால், ஹஜ் பயணம் செல்லாதவர்களும் இந்த நீரை அருந்தி, மகிழும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மக்கா, மதினா, தாயிப் நகரங்களுக்கு குழாய் மூலமும் ஜம் ஜம் நீர் வினியோகிக்கப்படுகிறது. இஸ்மாயில் நபி அவர்களின் பாதம் பட்ட இடத்திலும், தாயார் ஹாஜிரா அம்மையார் தண்ணீருக்காக ஓடியாடிய ஸவா - மர்வா குன்றுகளுக்கு இடையிலும் தொங்கோட்டச் சடங்கை நிறைவேற்றி நெகிழவும் முடிந்தது.
சுருக்கமாக ஜம்ஜம் நீரின் விசேஷங்களைக் கூறுகிறேன்:
- இந்த கிணறு என்றும் வறண்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக – அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
- அதன் ‘குடிக்கத்தக்க தன்மை” ஒவ்வொரு ஆண்டும் உம்ரா – ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி(universal)..
- பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும் – மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
- பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க – நீருக்காக சஃபா - மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.
Mash aAllah
ReplyDeleteJazakallah khair for you comments ....
ReplyDelete